Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் தாக்குதலில் நூலிழையில் தப்பித்த இசைக்குழு..!!

பரிஸ் தாக்குதலில் நூலிழையில் தப்பித்த இசைக்குழு..!!

9 கார்த்திகை 2019 சனி 10:30 | பார்வைகள் : 18416


நவம்பர் 13, பயங்கரவாத தாக்குதல் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் இடம்பெற்றது. நான்காவது ஆண்டு நிறைவுக்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், இந்த தாக்குதலில் இருந்து தப்பித்த ஒரு இசைக்குழு ஒன்றை பற்றி இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பார்க்கலாம். 
 
பத்தகலோன் அரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த 'ரொக்' இசைக்குழுவான  Eagles of Death Metal நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தது.  அதன் போதே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் நுழைந்த மூவர், சரமாரியாக அங்கிருப்பவர்களை சுட்டுக்கொன்றனர்.  வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 89 பேர் கொல்லப்பட்டனர். 
 
ஆனால் அன்றைய தினம் பத்தகலோன் அரங்கில் அவர்கள் மாத்திரம் நிகழ்ச்சி நடத்தவில்லை. காலையில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு இடம்பெற்றிருந்தன. 
 
Eagles of Death Metal இசைக்குழுவினர் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்னர்,  White Miles எனும் அவுஸ்திரேலிய இசைக்குழு நிகழ்ச்சி நடத்தியிருந்தது. 
 
அவர்கள் நிகழ்ச்சியை முடிந்துக்கொண்டு வெளியேறி ஒரு மணிநேரம் கழித்து இந்த பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது.  பின்னர் அவர்கள் இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேட்டியளிக்கும் போது <<இதை எங்களால் நம்ப முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள முடியவில்லை.>> என தெரிவித்தனர். 
 
அதேவேளை, தாக்குதல் இடம்பெற்ற போது இசை நிகழ்ச்சி நடத்திய Eagles of Death Metal இசைக்குழுவினரும் எவ்வித ஆபத்திலும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்