Paristamil Navigation Paristamil advert login

பத்தகலோன் அரங்கமும் பயங்கரவாத தாக்குதலும்..!!

பத்தகலோன் அரங்கமும் பயங்கரவாத தாக்குதலும்..!!

8 கார்த்திகை 2019 வெள்ளி 10:30 | பார்வைகள் : 18542


பத்தகலோன் திரையரங்கள் இரண்டு தடவைகள் புனரமைப்புச் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் ஒரு தடவையும், 2016 ஆம் ஆண்டில் ஒரு தடவையும். 
 
2016 ஆம் ஆண்டில் ஏன் புனரமைப்புச் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது என நீங்கள் அறிந்தது தான். பயங்கரவாத தாக்குதல். 
 
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 இன்று இந்த பத்தகலோன் அரங்கு உட்பட ஆறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இதில் மொத்தமாக 130 பேர் கொல்லப்பட்டனர். அதிகபட்ச உயிரிழப்பை கண்டிந்தது இந்த பத்தகலோன் அரங்கம் தான். 
 
இங்கு மாத்திரம் 89 பேர் உயிரிழந்திருந்தனர். 
 
அமெரிக்காவைச் சேர்ந்த Eagles of Death Metal இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி அரங்கு நிறைந்த ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்றது. 
 
 
அப்போது ரசிகர்களோடு ரசிகர்களாக இருந்த மூன்று பயங்கரவாதிகள்  மனித வெடிகுண்டாக மாறி, தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்தனர். 
 
அரங்கு முழுவதும் வெடித்துச் சிதறியது. என்ன ஏது என அறியாத அப்பாவி ரசிகர்கள் காரணங்களின்றி உடல் சிதறி பலியாகினர். 
 
அரங்கினுள் இருந்தவர்களில் 89 பேர் பலியாகினர். 200 பேர் காயமடைந்தனர். 
 
அங்கிருந்து தப்பி மரண பயத்துடன் வெளியேறி ஓடியவர்களுக்கு பரிசில் மேலும் பல தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிந்துகொண்டனர். 
 
உலகம் மிகுந்த கவலைக்குள்ளானது.
 
Eagles of Death Metal இசைக்குழுவின் பிரதான பாடகர் Chino Moreno, தாக்குதல் இடம்பெற்ற வேளை அரங்கின் பின் அறையில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார். இதனால் அவர் காப்பாற்றப்பட்டார். 
 
பத்தகலோன் திரையரங்கம் 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டது. 
 
*திருத்தப்பட்ட பதிப்பு.
 
பத்தகலோன் அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்