Paristamil Navigation Paristamil advert login

75,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளை.. புறநகர் பரிசில் சம்பவம்!

75,000 யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளை.. புறநகர் பரிசில் சம்பவம்!

25 ஐப்பசி 2024 வெள்ளி 08:39 | பார்வைகள் : 8386


பரிசின் தெற்கு புறநகர் பகுதியான  Kremlin Bicêtre (Val-de-Marne) இல் உள்ள நகைக்கடை ஒன்று உடைக்கப்பட்டு, 75,000 யூரோக்கள் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

Avenue de Fontainebleau வீதியில் உள்ள “Le Comptoir d'Italie” எனும் நகைக்கடையே ஒக்டோபர் 23, புதன்கிழமை மாலை கொள்ளையிடப்பட்டுள்ளது. தனி ஒரு நபராக துப்பாக்கியிடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையன், நகைகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளான். 

Val-de-Marne மாவட்ட ‘SDPJ 94’ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்