Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் பிரதமர்  4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும்!

கனடாவின் பிரதமர்  4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும்!

25 ஐப்பசி 2024 வெள்ளி 08:41 | பார்வைகள் : 1615


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது.

இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ தான் காரணம் என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி எம்.பி.க்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் லிபரல் கட்சி எம்.பி.க்கள் ரகசிய கூட்டத்தை நடத்யதுடன் , பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் அதிருப்தி வலியுறுத்தினர்.

4 நாட்களுக்குள் (அக்.28) ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு ட்ரூடோ மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.     

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்