இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!!

25 ஐப்பசி 2024 வெள்ளி 10:10 | பார்வைகள் : 7935
இன்று ஒக்டோபர் 25, வெள்ளிக்கிழமை காலை முதல் நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
Var, Gard ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இன்று சீரற்ற காலநிலை காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Var மாவட்டத்தின் Vidauban நகரில் இரண்டு மாதங்களில் பெய்யவேண்டிய மழை கடந்த 3 மணிநேரங்களின் கொட்டித்தீர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒருமணிநேரத்தில் 190 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
பல்வேறு வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தீயணைப்பு படையினர் பல்வேறு மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3