Paristamil Navigation Paristamil advert login

வெறும் வயிற்றில் பால் குடிக்கலமா?

வெறும் வயிற்றில் பால் குடிக்கலமா?

25 ஐப்பசி 2024 வெள்ளி 10:14 | பார்வைகள் : 1175


நம்மில் பலரும் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் பாலுடன் தங்களது நாளை தொடங்குகிறார்கள். பால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் கால்சியம், புரதம், வைட்டமின் டி மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவாசிய பல ஊட்டச்சத்துக்கள். பால் குடிப்பது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு ரொம்பவே நல்லா இருக்கும். 

இத்தகைய சூழ்நிலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதை குடிக்க சரியான நேரம் என்ன? இது போன்ற பல கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.

சிலருக்கு லாக்டோஸ் பிரச்சனை இருக்கும். இது வயிற்று வலி வயிற்றுப்போக்கு வாயு பிரச்சனை கொஞ்சம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் பால்குடித்தால் வயிற்றில் எரிச்சல் மற்றும் அமிலத்தன்மை ஏற்படும். ஒருவேளை நீங்கள் வெறும் வயிற்றில் பால் குடிக்க விரும்பினால் வயிற்றில் அமல தன்மை ஏற்படாமல் இருக்க சூடான பாலுக்கு பதிலாக நன்கு குளிர்ந்த பாலை குடியுங்கள்.

காலையில் வெறும் வயிற்றில் பால் குடிப்பது நல்லதல்ல. ஆனால் நீங்கள் காலை உணவு சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே வெறும் வயிற்றில் பால் குடிப்பதற்கு பதிலாக ஏதாவது உணவு சாப்பிட்ட பிறகு பால் குடிக்கலாம். குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நீங்கள் உடல் எடையை குறைக்க அல்லது இதய நோய் இருந்தால் நீங்கள் வெறும் வயிற்றில் பால் குடிக்க வேண்டாம். மேலும் நீங்கள் இரவு தூங்கும் முன் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் இரவு பால் குடிப்பது நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது மற்றும் சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்தால் ஆரோக்கியமும் மேம்படும்.

ஆய்வுகளின் படி, நீங்கள் காலையில் பால் குடிப்பது நல்லது தான். ஆனால் அதை குடிக்கும் முன் சில பழங்கள் அல்லது காலை உணவை சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் ஒருபோதும் பால் குடிக்காதீர்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்