வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
25 ஐப்பசி 2024 வெள்ளி 13:30 | பார்வைகள் : 2441
பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை இந்த மூன்றாவது காலாண்டில் 0.2% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக France Travail அறிவித்துள்ளது.
A பிரிவு (catégorie A) வேலை தேடுவோரின் எண்ணிக்கை தற்போது 3,021,600 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற இரண்டாவது காலாண்டோடு ஒப்பிடுகையில் 0.2% சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, catégorie A, B, C என மூன்று பிரிவிலும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வேலை தேடுவோரின் எண்ணிக்கை 0.4% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.