Paristamil Navigation Paristamil advert login

Paribas வங்கி - நெதர்லாந்து - சில தகவல்கள்...!!

Paribas வங்கி - நெதர்லாந்து - சில தகவல்கள்...!!

7 கார்த்திகை 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18544


Paribas எனும் வங்கி, BNP வங்கியுடன் இணைந்து BNP Paribas என மாறியது என முந்தைய பிரெஞ்சு புதினத்தில் தெரிவித்திருந்தோம். Paribas வங்கி குறித்து அறிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. இன்றைய பிரெஞ்சுப்புதினத்தில் இதன் பெயர் காரணம் பற்றி அறிந்துகொள்ளலாம். 
 
பெயரின் முன்னால் உள்ள Pari எனும் வார்த்தை பரிசை குறிக்கும். அது நீங்கள் அறிந்ததுதான். Bas என்றால் பள்ளம். பள்ளத்தில் இருக்கும் வங்கி..? அதனால் தான் வங்கி மூடவேண்டிய தேவை வந்ததோ...?? அட.. அதெல்லாம் இல்லைங்க..
 
முதலில் வங்கியின் பெயர் Banque de Paris et des Pays-Bas என (பரிஸ் மற்றும் நெதர்லாந்துக்கான வங்கி) நீளமாக இருந்தது. <<Les Pays-Bas>> எனும் பெயரில் இருந்து பிரித்து எடுத்த வார்த்தை தான் இந்த Bas. நெதர்லாந்தை Pays-Bas என பிரெஞ்சில் அழைக்கின்றார்கள். "The Low-Countries" 'தாழ்ந்த பிரதேசத்தில் உள்ள நாடு' என நெதர்லாந்தை அழைக்கின்றார்கள். 
 
1960 ஆம் ஆண்டு பாடகர் Bobbejaan Schoepen இந்த Paribas எனும் பெயரை வங்கிக்கு சூட்டினார். அவர் நெதர்லாந்து சென்றிருந்த போது Bas எனும் வார்த்தையில் ஈர்க்கப்பட்டார். அதனால் தான் paris எனும் பெயருடன் Bas சேர்ந்து Banque de Paris et des Pays-Bas எனும் நீளமான பெயரை சுருக்கி Paribas என பெயர் சூட்டினார். 
 
மேற்குறிப்பிட்ட பாடகர் Bobbejaan Schoepen, பெல்ஜியத்தைச் சேத்ந்தவர். அவரின் உறவினர் ஒருவர் பெல்ஜியத்தில் உள்ள Banque de Paris et des Pays-Bas வங்கியின் இயக்குனராக இருந்தார். 
 
Banque de Paris et des Pays-Bas எனும் இந்த பெயர் இவ்வளவு நீளமாக இருக்கின்றதே என எண்ணிய Bobbejaan Schoepen, அவரது உறவினரிடம் சொல்லி, வங்கியின் பெயரை சுருக்கு Paribas என வைக்கும் படி பரிந்துரை செய்தார். 
 
அப்படி உருவானது தான் இந்த பெயர்.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்