பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சிவகார்த்திகேயன்!
25 ஐப்பசி 2024 வெள்ளி 14:36 | பார்வைகள் : 1074
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கிய நிலையில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து முதல் வாரம் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியேறிய நிலையில், இரண்டாவது போட்டியாளராக கடந்த வாரம் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.
மேலும் இந்த வாரம் கண்டிப்பாக ஒரு பெண் போட்டியாளர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என தெரிகிறது. அவர் தர்ஷா அல்லது பவித்ராவாக இருக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், கடந்த இரண்டு வாரமாக டல் அடித்து வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி... மூன்றாவது வாரத்தில் சூடு பிடித்துள்ளது. போட்டியாளர்கள் முட்டி மோதி விளையாடுவதை தாண்டி, புத்திசாலித்தனமாக விளையாடுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அமரன் படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள், நடிகர் சிவகார்த்திகேயன் வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். போட்டிகளார்களுடன் பேசும்போது, அமரன் திரைப்படம் உணர்ச்சிகளை பதிவு செய்யும் ஒரு படம் என்றும், பிக் பாஸும் - அமரன் திரைப்படமும் ஒன்றுதான். இரண்டிற்கும் யூனிட்டி என்பது ரொம்ப முக்கியம் என கூறியுள்ளார்.
மேலும் போட்டியாளர்களுடன் 'அமரன்' திரைப்படம் தீபாவளிக்கு வர உள்ளதை கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு, போட்டியாளர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது குறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இன்றைய தினம் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்குள் வருவதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில், சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ், லாலு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், உளிட்டா பலர் நடித்துள்ளனர். இப்படத்தை உலக நாயகன் கமலஹாசன் தயாரிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு, சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்ய, ஆர் கலைவாணன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.