Paristamil Navigation Paristamil advert login

கைதி 2 படம் குறித்து சூப்பர் அப்டேட்

கைதி 2 படம் குறித்து சூப்பர் அப்டேட்

25 ஐப்பசி 2024 வெள்ளி 15:01 | பார்வைகள் : 262


கைதி திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி 2-ஆம் பாகத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

கார்த்தி முன்னணி கேரக்டரில் நடித்த கைதி திரைப்படம் 2019 அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கார்த்தி உடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் விறுவிறுப்பாக காட்சிகள் அமைத்து இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்கி இருந்தார். இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜுடைய சினிமாட்டிக் யுனிவர்ஸ் LCU-ல் கைதி திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியை லோகேஷ் விக்ரம் படத்தில் இடம்பெற வைத்தார்.

கார்த்தியின் கெரியரிலும் கைதி திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்வு குறித்து லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் நடிகர் கார்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் பிரபுவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னால் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்