Mbappé - PSG விவகாரம் .. 55 மில்லியன் யூரோக்கள் வழங்க மறுத்த கழகம்!
25 ஐப்பசி 2024 வெள்ளி 15:31 | பார்வைகள் : 2749
’சம்பள மீதி’ விவகாரம் PSG கழகத்துக்கும் Mbappé க்கும் இடையே பெரும் மோதலாக மாறியுள்ளது. அவருக்கு 55 மில்லியன் சம்பள மீதியினை கழகம் வழங்கவேண்டும் என பிரெஞ்சு உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சட்டப்பிரிவு (Ligue de Football Professionnel) அறிவித்துள்ளது.
PSG உடனான ஒப்பந்தம் நிறைவடைவதற்கு இறுதி மூன்று மாதங்கள் (2024 - ஏப்ரல் , மே, ஜூன்) அவருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு அவருக்கான போனஸ் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொடுப்பனவுகள் வழங்குவதற்காக அறிவித்தல் விடுக்கப்பட்ட நிலையில், அதனை PSG கழகம் மறுத்துள்ளது. இதனால் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.