Paristamil Navigation Paristamil advert login

BNP Paribas வங்கி! - சில 'அடடே' தகல்கள்..!!

BNP Paribas வங்கி! - சில 'அடடே' தகல்கள்..!!

6 கார்த்திகை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18222


BNP Paribas வங்கி உங்களுக்கு என்ன என்ன தகவல்கள் தெரியும்..?? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் இது குறித்து பல 'அடடே' தகவல்களை தெரிந்துகொள்ளலாம்..!!
 
BNP Paribas ஒரு சர்வதேச வங்கி. உலகின் எட்டாவது மிகப்பெரிய வங்கி சேவை நிறுவனம். கிட்டத்தட்ட 77 நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வருகின்றது. 
 
BNP என்றால் Banque Nationale de Paris (பரிஸ் தேசிய வங்கி) என்று அர்த்தம். வங்கி ஆரம்பிக்கப்படும் போது இதன் பெயரில் தான் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் தான் Paribas எனும் பெயர் ஒட்டிக்கொண்டது. 
 
ஏன் Paribas இப்பெயரோடு இணைந்துகொண்டது..??!! Paribas என்பது தனியே ஒரு வங்கி. 2000 ஆம் ஆண்டில் இந்த வங்கி செயலிழந்தது. அதன் பின்னர் BNP வங்கியோடு Paribas இணைந்து, BNP Paribas என உருமாறியது. 
 
BNP வங்கி 1848 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 171 வருடங்களுக்கு முன்னர். 1872 ஆம் ஆண்டு Paribas வங்கி ஆரம்பிக்கப்பட்டது. இரண்டும் 2000 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி இணைந்துகொண்டது. 
 
2018 ஆம் ஆண்டில் இவ்வங்கியில் 202,624 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள். 
 
பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளில் மிக பிரதானமாக இயங்கும் இந்த வங்கி, இந்த மூன்று நாடுகளில் மட்டும் 30 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 
பிரான்சில் 2,200 கிளைகள் உள்ளன. இதன் தலைமைச் செயலகம் பரிஸ் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள 
Boulevard des Italiens இல் உள்ளது. 
 
**

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்