iFop கருத்துக்கணிப்பு நிறுவனம்! - சில ஆச்சரிய தகவல்கள்...!!
5 கார்த்திகை 2019 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18589
'பொதுமக்கள் என்ன நினைக்கின்றார்கள்?' என்பது தான் பல நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் சினிமாவுக்கும் மிக தலைவலியான கேள்வி...
பொதுமக்களின் கருத்து அத்தனை முக்கியம். இதற்காக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளுவதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் இந்த iFop.
'பரிசில் வாழ்வதற்கு எத்தனை வீத மக்களுக்கு பிடிக்கின்றது?
'இம்மானுவ மக்ரோன் மீது எத்தனை வீத செல்வாக்கு உள்ளது?'
'மஞ்சள் மேலங்கி போராட்டம் தேவையானது தானா?'
என பல்வேறு கேள்விகளுக்கு கடந்த மாதங்களில் விடை கண்டது இந்த நிறுவனம்.
மிக மிக துல்லியமான மக்கள் விருப்பத்தை கண்டுபிடிக்கும் இந்த நிறுவனம் 1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
டிசம்பர் 1 ஆம் திகதி Jean Stoetzel என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவர் Sorbonne பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்.
ஒவ்வொரு தேர்தலில் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றும். குறிப்பாக 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் iFop நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது.
iFop என்றால் <<Institut français d'opinion publique>> என அர்த்தம்.
தற்போது இதன் நிறுவனர் பிரெஞ்சு செல்வந்தர் Laurence Parisot ஆவர்.
பிரெஞ்சு மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதோடு இல்லாமல், இது ஒரு சர்வதேச நிறுவனம். மேலும் பல நாடுகளிலும் இவர்கள் தங்கள் சேவைகளை வழங்குகின்றனர்.