எண்ணெய் புகை, புற்றுநோயை ஏற்படுத்தும் அவதானம். ANSES
26 ஐப்பசி 2024 சனி 08:07 | பார்வைகள் : 2498
தேசிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (L'Agence nationale de sécurité sanitaire) இன்று வெளியிட்ட அறிக்கையில் உணவுப் பொருள்களை எண்ணையில் பொரிக்கும் (வறுக்கும்) போது எண்ணையில் இருந்து வெளிவரும் எண்ணையுடன் கூடிய புகை புற்றுநோயை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
"புற்றுநோய்கள் மற்றும் கார்டியோ நியூரோவாஸ்குலர் நோய்களே 2022 இல் பிரான்சில் இறப்புக்கான முக்கிய காரணங்கள்" என தெரிவித்துள்ள ANSES, அதிக வெப்பத்தோடு வெளிப்படும் எண்ணைப் புகையில், பொரிக்கப்படும் உணவுப் பொருட்களில் கலக்கப்படும் சுவையூட்டிகளின் பதார்தங்களும் கலந்திருக்கும். இதனை சுவாசிக்கும் போது மேற்குறிப்பிட்ட நோய்களை ஏற்படுத்தும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் உணவைத் தயாரிக்கும் போது மிக மிகக்குறைந்த அளவில் உள்ள பாதிப்பு, உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், உணவகங்களில் தொடர்ச்சியாக அதே வேலையை செய்யும் நபர்களை அதிகம் பாதிக்கிறது என மேலும் தெரிவித்துள்ளது. இதற்கு முறையான பாதுகாப்பு, சரியான வழிமுறைகளை உணவகங்களும், தொழிற்சாலைகளும் கடைப்பிடிக்க வேண்டும் என ANSES வேண்டுகோள் விடுத்துள்ளது.