வரவுசெலவுத் திட்டம் 2025 : பெரிய நிறுவனங்களுக்கு அதிக வரி.. நிராகரிப்பு!
26 ஐப்பசி 2024 சனி 08:20 | பார்வைகள் : 2024
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வரைவு கடந்த திங்கட்கிழமை முதல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ‘பெரிய நிறுவனங்களுக்கு அதிக வரி’ எனும் திட்டம் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது.
பிரான்சில் அதிக வருமானத்தை ஈட்டும் பெரிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியினை, அதிகரிப்பதே இந்த article 11 பிரிவு வரைவாகும். அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு ஆதரவாக 113 வாக்குகளும், அதற்கு எதிராக 122 வாக்குகளும் பதிவாகின. அதை அடுத்து இந்த வரைவு கைவிடப்பட்டது.
அதேவேளை, ’வரவுசெலவுத் திட்டம் 2025’ இன் விவாதம் இன்று சனிக்கிழமையும் இடம்பெற உள்ளது. ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை அது தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.