Paristamil Navigation Paristamil advert login

விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா.. பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்!

விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா.. பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தல்!

26 ஐப்பசி 2024 சனி 12:00 | பார்வைகள் : 1113


பிரான்சில் கடந்தவாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டைகளை பயன்படுத்தவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tout frais tout français, Douce France, Ovalis, Poitou oeufs மற்றும் ECO+ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த முட்டைகளில் ”Salmonella Typhimurium” என அழைக்கப்படும் ஒருவகை பக்டீரியா கலந்துள்ளது. அதனை பயன்படுத்தவேண்டாம் எனவும், அதனை வாங்கிய இடங்களில் திருப்பிக்கொடுத்து பணத்தை மீளப்பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 3. 2024 இற்குப் பின்னர் திகதியிட்ட அனைத்து 6, 10 மற்றும் 12 முட்டைகள் கொண்ட பெட்டிகள் அனைத்திலும் இந்த பக்டீரியா கலந்துகொள்ளதை நினைவில் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Salmonella Typhimurium பக்டீரியானது வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, வாந்தி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்