Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி மக்ரோனின் வாழ்க்கை ரகசியங்கள்..!!

ஜனாதிபதி மக்ரோனின் வாழ்க்கை ரகசியங்கள்..!!

4 கார்த்திகை 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 18382


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரான்சின் இளம் வயது ஜனாதிபதி என்பது உங்களுக்குத் தெரியும். இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அவர் குறித்து சில தெரியாத 'ரகசியங்களை' தெரிந்துகொள்ளலாம். 
 
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிறந்து வளர்ந்தது எல்லாமே 'மத சார்பற்ற' ஒரு குடும்பத்தில் தான். அவரின் அப்பாவோ அல்லது அம்மா.. ஏன் தாத்தா பாட்டி கூட எந்த மத கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள். அப்படியென்றால்  மத சார்பற்ற பிரெஞ்சு தேசத்துக்கு ஜனாதிபதி ஆவதற்கு தகுதியுடையவர் தானே..?!! 
 
ஆனால் மக்ரோன் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் தனது 12 ஆவது வயதில் ஞானஸ்நானம் பெற்றார். அதை மேற்கொள்ளும் படி அவரே கோரியிருந்தார். இப்போது மக்ரோன் ஒரு 'அஞ்ஞான நாத்திகர்'.. அட பாவமே..!!
 
தற்போது ஜனாதிபதியாக €15,000 களுக்கும் குறைவாக ஊதியம் பெறும் மக்ரோன், முன்னதாக வங்கி ஒன்றில் €50,000 வரையான சம்பளத்தை பெற்றிருந்தார். 
 
மக்ரோன் சில மாதங்கள் Esprit எனும் இலக்கிய இதழில் ஆசிரியர் குழாமில் பணியாற்றினார். 
 
மக்ரோனின் தந்தை Jean-Michel இற்கு முதலில் பிறந்த குழந்தை (மக்ரோனின் சகோதரன்) பிறக்கும் போதே இறந்த நிலையில் தான் பிறந்தது. அதன் பின்னரே மக்ரோன் பிறந்தார். 
 
2006 ஆம் ஆண்டில் பிரெஞ்சு தொழிலதிபர்  Laurence Parisot,  இம்மானுவல் மக்ரோனுக்கு Mouvement des Entreprises de France நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் படி கோரியிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பை மக்ரோன் நிராகரித்திருந்தார். இதனால் மில்லியன்களின் வரவேண்டிய மாத வருமானத்தை இழந்திருந்தார். 
 
உங்களுக்குத் தெரியுமா... இவர் தனது வங்கி பதவியை இராஜினாமா செய்துவிட்டு அரசியல் பக்கம் ஒதுங்கும் போது பிரபல உணவு பொருட்கள் தயாரிப்பாளர்களான  Nestlé நிறுவனத்தில் சில நாட்கள் மேலாளராக பணி புரிந்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்