Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் அந்த வைல்ட் கார்ட் என்ட்ரி யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் அந்த வைல்ட் கார்ட் என்ட்ரி   யார்  தெரியுமா?

26 ஐப்பசி 2024 சனி 14:04 | பார்வைகள் : 152


18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் ரவீந்தரும், 2வது வாரத்தில் அர்னவும் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 7 பெண்கள் 7 ஆண்கள் களத்தில் உள்ளனர்.இந்த நிலையில் நிச்சயம் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்ற பேச்சு பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியே பார்வையாளர்கள் மத்தியிலும் அடிபட்டு வருகிறது.

மற்ற சீசன்களை விட இந்த சீசனில் சுவாரஸ்யம் சற்று குறைந்தே காணப்படும் நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழையப்போகும் போட்டியாளர்களை நிச்சயம் பிக் பாஸ் குழு தரமாக தேர்ந்தெடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது

 இந்த நிலையில், இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் பிக் பாஸ் சீசன் 8ல் வைல்ட் கார்டு என்ட்ரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவலின்படி, பின்னணி பாடகியும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக பங்கேற்ற நடிகை மாயாவின் அக்காவும் ஆன ஸ்வாகதா வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழையவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்