ஈஃபிள் கோபுரத்தின் உணவகங்கள்!!
10 தை 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18474
ஈஃபிள் கோபுரத்தில் இரண்டு உணவகங்கள் உள்ளது நீங்கள் அறிந்ததே. சில தெரியாத தகவல்கள் இன்றைய பிரெஞ்சு புதினத்தில்...
le 58 tour eiffel
ஈஃபிளின் முதலாவது தளத்தில் le 58 tour eiffel உணவகம், மிக அட்டகாசமான ஒரு உணவகம். இரவு உணவு மிக பிரபலம். €89 களில் இருந்து உணவுகள் ஆரம்பிக்கின்றன என்பது ஒரு கொசுறு தகவல்.
'ரஷ் ஹவர் 3' திரைப்படத்தில் ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெறுவது போன்ற சண்டைக்காட்சி ஒன்று வரும். ஜாக்கி சானின் அட்டகாசமான அந்த சண்டைக்காட்சியில் குறித்த இந்த உணவகத்துல் வில்லனும் ஜாக்கி சானும் இருந்து உரையாடிக்கொண்டிருப்பார்கள். அதன் பின்னரே சண்டை ஆரம்பிக்கும். யூடியூப்பில் உள்ளது அந்த காட்சி.
Le Jules Verne
ஈஃபிளின் இடண்டாவது தளத்தில் உள்ள இந்த உணவகம் ஒரு குட்டி சொர்க்கம். குறிப்பாக இரவு உணவை உண்பதற்கு பிரான்சிலேயே இதுபோன்ற ஒரு அற்புதமான இடம் இல்லை.
ஆனால் நாங்கள் உணவின் சுவை பற்றி பேசவில்லை. மாறாக ஈஃபிளின் இரண்டாவது தளத்தை பற்றி பேசுகின்றோம். இருள் பூசியிருக்கும் பரிசில், மின் விளக்குகளால் ஒளிரும் பரிசை காண்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். அத்தோடு சுவையான உணவு என்றால் அற்புதமான ஒரு 'காம்போ' தானே??
1937 ஆம் ஆண்டில் இருந்து 1981 வரையான காலப்பகுதியில் ஈஃபிள் கோபுரத்தில் உச்சியில் ஒரு உணவகம் இருந்தது. ஆனால் கட்டமைப்பு பரிசீலனைகளை கருத்தில் கொண்டு அது அங்கிருந்து அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக தற்போது ஒரு சாம்பெயின் விடுதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சாப்பிடப்போகலாமா..?!!