Paristamil Navigation Paristamil advert login

ரஜினி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா?

 ரஜினி மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறாரா?

1 மார்கழி 2024 ஞாயிறு 14:20 | பார்வைகள் : 361


கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‛தளபதி' படத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர்கள் எந்த படத்திலும் இணையவில்லை. அதேபோன்றுதான் ‛நாயகன்' படத்திற்கு பிறகு கமலை வைத்து எந்த படமும் இயக்காமல் இருந்த மணிரத்னம் தற்போது அவர் நடிப்பில் ‛தக்லைப்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படியான நிலையில் கமலை தொடர்ந்து அடுத்து ரஜினியை வைத்தும் மணிரத்னம் ஒரு படம் இயக்குவதாக ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது. அந்த நேரத்தில் அதுகுறித்து சுஹாசினி மணிரத்னத்திடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‛ரஜினி -மணிரத்னம் இணைவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை,' என்று பதில் கொடுத்திருந்தார். ஆனபோதிலும் தற்போது மீண்டும் ரஜினியை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்கப் போவதாகவும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளின் போது அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

மேலும் ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் -2 படத்தின் புரோமோ வீடியோ மற்றும் கூலி படத்தின் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்