வவுனியாவில் வாள் வெட்டு - குடும்பஸ்தர் உயிரிழப்பு
1 மார்கழி 2024 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 754
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் மாடுகளை சாய்த்துக்கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது வன்முறை குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.