குடும்பவன்முறையில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் சடலமாக மீட்பு!!
1 மார்கழி 2024 ஞாயிறு 17:58 | பார்வைகள் : 1481
குடும்ப வன்முறையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட ஒருவர் Montgeron (Essonne) நகர தடுப்பு சிறைச்சாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
36 வயதுடைய ஒருவர் கடந்த நவம்பர் 29, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். குடும்ப வன்முறையில் ஈடுபட்டமைக்காக அவர் கைது செயப்பட்டிருந்தார். பின்னர் அவர், நவம்பர் 30, நேற்று சனிக்கிழமை பிற்பகல் அவரது தடுப்பு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தூக்கில் தொங்குவதை பிற்பகல் 2.40 மணி அளவில் அதிகாரிகள் பார்வையிட்டதாகவும், அதன் பின்னர் மருத்துவ உதவிக்குழு அழைக்கப்பட்டபோதும் நிலமை கைமீறிச்சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த மூவர் தற்கொலை செய்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.