Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!

ஈஃபிள் கோபுரத்துக்கு வயது 130!!

9 தை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 17761


ஈஃபிள் கோபுரம் என்றதும் பிரான்ஸ் ஞாபகத்துக்கு வரும்... அல்லது பிரான்ஸ் என்றால் ஈஃபிள் கோபுரம் ஞாபகத்துக்கு வரும். அதுபோல் மிகச்சிறந்த அடையாளமாக உள்ள ஈஃபிளுக்கு இந்த 2019 ஆம் ஆண்டு சிறப்பான ஒரு வருடம் ஆகும்!

1889 ஆம் வருடம் திறக்கப்பட்ட இந்த ஈஃபிள் 2019 ஆம் ஆண்டில் தனது 130 ஆவது ஆண்டை கொண்டாடுகிறது.

ஜனவரி 28, 1887 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டிடப்பணிகள் 1889 ஆம் ஆண்டில் நிறைவடைந்து,  மார்ச் 15 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது.

உலகின் மிக பிரபலமான சுற்றுலாத்தலம் என சொல்வதற்குரிய காரணங்கள் பல உண்டு. இதுவரை 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஈஃபிள் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டில் 6.91 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்ட இந்த ஈஃபிள், அவ்வருடத்தின் 'உலகின் அதிக சுற்றுலாப்பயணிகளால் பார்வையிடப்பட்ட சுற்றுலாத்தலம்!' எனும் சிறப்பை பெற்றிருந்தது.

அசப்பில் ஈஃபிள் கோபுரம் போன்று தோற்றமளிக்கும் பல கோபுரங்கள் உலகெங்கும் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள Blackpool Tower இதற்கு ஒரு உதாரணம்.

Tōkyō tawā என அழைக்கப்படும் 'டோக்கியோ ரவர்' கோபுரமும் ஈஃபில் கோபுரத்தின் 'இன்ஸ்பிரேஷன்'னில் உருவானதுதான்.

ஈஃபிள்...

வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல...!! 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்