மருத்துச்சீட்டில் புதிய நடைமுறை!
2 மார்கழி 2024 திங்கள் 09:00 | பார்வைகள் : 3233
மருத்துவரால் வழங்கப்படும் மருந்துச்சீட்டில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மருந்தகங்களில் மருந்துகளை பெறும் பொதுமக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறையின் படி, மருந்துச் சீட்டுக்கள் முழு விபரங்களுடன் இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு மருந்துச் சீட்டும் 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மருந்துச் சீட்டில், மருந்தில் அளவும், அதை எடுத்துக்கொள்ளவேண்டிய காலநேரத்தையும் முழுமையான எழுதியிருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நேற்று டிசம்பர் 1 ஆம் திகதி முதல் இந்த சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.