பரிஸ் vs மார்செ!!
7 தை 2019 திங்கள் 10:30 | பார்வைகள் : 17741
முன்னர் ஒருதடவை பரிஸ் நகரத்துக்கும் இலண்டன் நகரத்துக்கும் உள்ள தொடர்புகள் வித்தியாசங்கள் போன்றவற்றை பிரெஞ்சு புதினத்தில் எழுதியிருந்தோம்.. இன்று அதை விட சுவாரஷ்யமான ஒரு தகவலை பார்க்கலாம்.
பரிஸ் vs மார்செ!!
1900 ஆம் ஆண்டில் இருந்து உலகின் பல நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வர, பிரான்சில் இருந்து இரண்டு நகரங்கள் போட்டி போட்டு வளர்ந்து வந்தன. ஒன்று பரிஸ்.. மற்றையது மார்செ!!
பரிசுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் அடுத்த தெரிவு, மார்செயாகத்தான் இருக்கும்.
பிரான்சின் அதிக சனத்தொகை கொண்ட நகரங்களில் பரிசுக்கு அடுத்ததாக மார்செ உள்ளது.
பரிஸ் உதைப்பந்தாட்ட குழுவும், மார்செ அணியும் மோதுகின்றன என்றால் அன்று பெரும் பஞ்சாயத்து தான். ரசிகர்களுக்கிடையே ஒரு உலக யுத்தமே இடம்பெறும்.
மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கின் படி, பரிசில் 22,06,488 பேர் வசிக்கின்றனர்.
மார்செயில் 869,815 பேர் வசிக்கின்றனர்.
பரிஸ், சுற்றுலாப்பயணிகள் மூலம் பெரும் வருமானத்தை கொண்டுவருகின்றது என்றால், மார்செ தொழில் பேட்டைகள், உற்பத்திகள் மூலம் வருமானத்த கொண்டுவருகின்றன.
பரிசில் உள்ள வேலை வாய்ப்பை விட மார்செயில் வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது.
இரண்டு நகரங்களில் 'செலவீனங்கள்' அதிகம் கொண்ட நகரம் கண்டிப்பாக பரிஸ் தான். ஆனால் மார்செ ஒன்று அத்தனை தொலைவில் இல்லை.
2016 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகள் மார்செயில் இடம்பெற்றிருந்தன. அதற்கு போட்டியாக 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பரிஸ் தயாராகி வருகின்றது.
ஆனால், இரண்டு நகரங்களில் எது பெஸ்ட் என்று கேட்டால்... பரிஸ் நகரத்தையே தேர்ந்தெடுக்கலாம். பரிசில் மேலதிகமாக 15 பல்கலைக்கழகங்கள், 'வேலையில்லாதோர்' எண்ணிக்கை 5.3 எனும் குறைவான வீதம், 143 மேலதிக அருங்காட்சியங்கள், குறைந்த பட்ச ஊதியம் 782.07 டொலர்ஸ் அதிகமாக உள்ளது எனும் பல காரணிகள் பரிசை 'டொப்'ப்பில் வைத்துள்ளது.