நோர்து-டேம் : நுழைவுச் சிட்டை முன்பதிவு ஆரம்பம்!
2 மார்கழி 2024 திங்கள் 10:00 | பார்வைகள் : 1171
நோர்து-டேம் தேவாயலம் திறப்புவிழாவுக்கு தயாராகியுள்ளது. வரும் 7 ஆம் திகதி பல சிறப்பு விருந்தினர்களுடன் திறப்பு விழா இடம்பெற உள்ளது. மறுநாள் 8 ஆம் திகதியில் இருந்து பொதுமக்கள் தேவாலயத்தை பார்வையிட முடியும்.
இதற்கான முன்பதிவுகளை தேவாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வாயிலாகவோ, அதன் தொலைபேசி செயலியூடாகவோ முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவுகள் மேற்கொள்ள சில விபரங்கள் மட்டும் போதுமானது. கட்டணங்கள் எதுவும் செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை முதல் முன்பதிவுகள் ஆரம்பமாகும் எனவும், டிசம்பர் 8 ஆம் திகதி மாலை 5.30 மணி முதல் தேவாலயத்தை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.