ஈஃபிள் : 14,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பார்வையிட அனுமதி!!

2 மார்கழி 2024 திங்கள் 11:00 | பார்வைகள் : 7212
ஈஃபிள் கோபுரத்தை இலவசமாக பார்வையிட 14,000 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோபுரத்தினை படிக்கட்டு வழியாக மட்டுமே ஏறி பார்வையிடமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CM2 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Lambert பாடசாலை மாணவர்கள் ஈஃபிள் கோபுரத்தினை பார்வையிட உள்ளனர்.
இந்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 14,000 மாணவர்கள் இலவசமாக படிகள் வழியாக ஏறி ஈபிஃள் கோபுரத்தினை பார்வையிட முடியும்.
டிசம்பர் , ஜனவரி, பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மாதங்களுக்குள் கோபுரத்தை ஆண்டுதோறும் இலவசமாக பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025