கிழக்கு உக்ரைனில் இரு கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா
2 மார்கழி 2024 திங்கள் 08:15 | பார்வைகள் : 1074
கிழக்கு உக்ரைனில் இரண்டு கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் டோனெட்ஸ்க் (Donetsk) மண்டலத்தில் உள்ள Illinka மற்றும் Petrivka கிராமங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் 1 ஆம் டிசம்பர் மாதம் அறிவித்தது.
ரஷ்ய படைகள் கடந்த இரண்டு மாதங்களில், 2022 மார்ச் பிறகு, டோனெட்ஸ்க் பகுதியில் மிக வேகமாக முன்னேறி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யப் படைகள் Kurakhove மற்றும் உக்ரைனின் எஃகு தொழில்துறைக்கு முக்கியமான கோக்கிங் நிலக்கரியை வழங்கும் Pokrovsk நகரை நோக்கி சென்று வருகின்றன.
ரஷ்ய விமானத் தாக்குதல் பாதுகாப்பு அமைப்புகள் கடந்த 24 மணித்தியாலயதில் 55 உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைனின் 20% பகுதியை ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
இந்த முன்னேற்றங்கள், சிறிது காலமாக நிலையான போரின் பின்னணியில் ரஷியாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்தியதாக கருதப்படுகிறது.