21 ஆம் நூற்றாண்டில் எந்த பவுலரும் செய்யாத சாதனையை படைத்த வீரர்
2 மார்கழி 2024 திங்கள் 08:19 | பார்வைகள் : 345
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேடன் சீல்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மொத்தம் 15.5 ஓவர்கள் (95 பந்துகள்) வீசிய சீல்ஸ், வெறும் 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததுடன், 10 ஓவர்களை மெய்டனாக வீசினார்.
இதன்மூலம் குறைந்த எகானமியில் (0.31) பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.
அவருக்கு முன்பாக, 1963-64ஆம் ஆண்டில் 0.15 எகானமியில் பந்துவீசிய வீரர் எனும் சாதனையை வைத்துள்ள பபு நட்கர்னி (Bapu Nadkarni), 32 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்களுடன், 27 ஓவர்களை மெய்டன் செய்திருந்தாலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.