Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு -  வானிலை ஆய்வு மையம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு -  வானிலை ஆய்வு மையம்

2 மார்கழி 2024 திங்கள் 08:58 | பார்வைகள் : 1487


அமெரிக்காவில் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விடவும் அதிகமாக குளிர் வீசி பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளன.

பனித்துகள்கள் சாலை மற்றும ரெயில் தண்டவாளங்களை மூடியதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்டவற்றில் 61 செ.மீ அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.

அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்