Paristamil Navigation Paristamil advert login

French Gothic கட்டிடக்கலை! - சில தகவல்கள்!!

French Gothic கட்டிடக்கலை! - சில தகவல்கள்!!

2 தை 2019 புதன் 10:30 | பார்வைகள் : 17992


பிரான்சில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் கூட தற்போது நல்ல நிலையில் இருப்பது நீங்கள் அறிந்ததே. உலகம் முழுவதும் பிரெஞ்சு கட்டிடக்கலைகள் மிக பிரசித்தம். இங்கிருந்து 'கொப்பி', செய்யப்பட்ட பல கட்டிடங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நீங்கள் காணலாம்..! 
 
சரி.. இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பிரெஞ்சு கட்டிடக்கலையில் புகழ்பெற்ற ஒரு வடிவமைப்பை பற்றி  அறிந்துகொள்ளலாம்.
 
French Gothic
 
Gothic என்பது ஒரு வடிவம். அது இதனோடு தான் பொருத்திப்பார்க்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. இந்த வடிவில் கட்டிடங்கள், அலுமாரிகள், ஏன்.. ஒரு கணனி Font கூட உள்ளது. 
 
French Gothic இன் பிறப்பு பன்னிரண்டாம் நூற்றாண்டாகும். 1140 ஆம் ஆண்டில் இருந்து 16 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை பிரான்சில் புகழ்பெற்ற கட்டிடக்கலையாக இது இருந்தது. 
 
Notre Dame Cathedral தேவாலயத்தை பாருங்கள்... வானை முட்டும் அளவு உயரமாக இருக்கின்றது அல்லவா...! இந்த தேவாலயம் French Gothic எனும் வடிவத்தில் தான் கட்டப்பட்டுள்ளது. 
 
அகலம் குறைந்து உயரம் அதிகமாக இருக்கும் இந்த வடிவமைப்பு. 
 
இந்த வடிவமைப்பில் பல்வேறு கட்டிடங்களை நீங்கள் காணலாம். Chartres Cathedral, Reims Cathedral, Sainte-Chapelle போன்ற தேவாலயங்கள் முற்று முழுதாக இந்த வடிவமைப்புள் அடங்கும். 
 
அதேபோன்று Flying buttress என அழைக்கப்படுகின்ற ஒரு கட்டிட கலையும் இதனுடன் இணைந்துள்ளது. (பறவையின் இறக்கை போல் உள்ள சிறிய சிறிய தூண்களை கொண்டு பலம் சேர்த்தல்) இவை இரண்டு கலைகளையும் பயன்படுத்தியே Notre Dame Cathedral கட்டப்பட்டுள்ளது. (அதன் கூரைகளை கவனித்தீர்கள் என்றால் தெரியும்) 
 
பிரெஞ்சு தேசத்துக்கு என பிரத்யேகமாக உள்ள இந்த கட்டிட கலை குறித்து நாம் எப்போதும் பெருமை கொள்ளலாம்..!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்