அஜித் உடன் மோதும் எஸ்ஜே சூர்யா ..?
2 மார்கழி 2024 திங்கள் 13:27 | பார்வைகள் : 5530
அஜித் நடித்த 'விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதே நாளில் ரிலீஸ் ஆகும் ’கேம் சேஞ்சர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா இது குறித்து கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நேற்று நடிகர் எஸ்ஜே சூர்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராம்சரணுடன் நீங்கள் நடித்த ’கேம் சேஞ்சர்’ படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், அதே தினத்தில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படமும் வெளியாகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த எஸ் ஜே சூர்யா, "இரண்டு படத்திற்கும் எந்த விதமான போட்டியும் இல்லை. ’கேம் சேஞ்சர்’ படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ’விடாமுயற்சி’ திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அஜித் அவர்களின் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், பார்வையாளர்கள் ’கேம் சேஞ்சர்’ படத்திற்கும் வருவார்கள்?" என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதே விழாவில் கலந்து கொண்ட வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், ’தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், ஜெயம் ரவியை வைத்து இரண்டு படங்கள் தயாரித்து வருவதாகவும் கூறினார். மேலும், ஒரு மிகப்பெரிய ஸ்டார் படத்தை நாங்கள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றும், அது குறித்து அறிவிப்பை 2026 இல் வெளியிடுவோம்’ என்றும் அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan