சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு
2 மார்கழி 2024 திங்கள் 16:40 | பார்வைகள் : 329
பரீட்சைகள் திணைக்களம் 2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகளை அரச மற்றும் தனியார் பாடசாலைப் பரீட்சார்த்திகள் இணையத்தளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முதலில், நிகழ்நிலை பதிவு நவம்பர் 30-ம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.இருப்பினும், இதற்கான காலக்கெடு தற்போது டிசம்பர் 10-ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.