Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் : திறப்புவிழாவுக்கு வருவதை உறுதிசெய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

நோர்து-டேம் : திறப்புவிழாவுக்கு வருவதை உறுதிசெய்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

3 மார்கழி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1825


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்புவிழாவில் கலந்துகொள்வார் என உறுதிப்படுத்தியுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக பொற்பேற்க உள்ள ட்ரம்ப், தேவாலயத்தின் திறப்புவிழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் வருவாரா இல்லையா என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் இல்லாத நிலையில், நேற்று மாலை அவரது வருகையை உறுதிப்படுத்தினார்.

”ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பேரழிவுகரமான தீவிபத்திற்குப் பிறகு முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட அற்புதமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நோட்ரே டேம் பேராலயத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நான் சனிக்கிழமையன்று பிரான்ஸின் பரிஸுக்குச் செல்வேன் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.” என அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெற உள்ள இந்த நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழாவுக்கு 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தலைவர்கள் வருகை தர உள்ளனர். ட்ரம்ப் இதுவரை பதவியேற்காத நிலையில், அமெரிக்காவின் தற்போதைய முதல் பெண்மணியாக உள்ள ஜில் பைடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதை இரு நாட்களுக்கு முன்பாக உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்