வரலாற்றில் இன்று! - Gustave Eiffel மறைந்த நாள்!!
28 மார்கழி 2018 வெள்ளி 10:30 | பார்வைகள் : 17763
இன்று டிசம்பர் 28, உலகம் இன்னமும் பார்த்து ஆச்சரியப்படும் படியான ஈஃபிள் கோபுரத்தை உருவாக்கிய Gustave Eiffel, இவ்வுலகை விட்டு மறைந்த நாள்.
டிசம்பர் 15, 1832 ஆம் ஆண்டு Dijon நகரில் பிறந்தார். அவரின் முழு பெயர் Alexandre Gustave Bonickhausen dit Eiffel.
கட்டுமான பொறியியலாளராக இருந்த இவர், தனது பெயரை இந்த உலகம் எப்போதும் உச்சரிக்கும் என்பது மாதிரியான ஒரு கோபுரத்தை உருவாக்கினார். அதுவே ஈஃபிள் கோபுரம்.
பிரான்சை தாண்டி உலகம் முழுவதும் பல அடையாளங்களை இவர் விட்டுச் சென்றுள்ளார்.
இவர் உருவாக்கிய பல கட்டிடங்கள், மேம்பாலங்கள் இன்று அழிவடையும் நிலையில் உள்ளன. குறிப்பாக வியட்னாமில் இவர் உருவாக்கிய பல கட்டிடங்கள் அழிந்துள்ளன.
Bordeaux நகரில் இவர் உருவாக்கிய தொடரூந்து மேம்பாலம் இன்று பயன்பாடு இல்லாமல் சிதைவுக்கு உள்ளாகியுள்ளன.
இவரின் பெருமைகளை பேசும் கலைகளை அழியவிடாமல் காப்பாற்ற ஒரு அமைப்பு கூட உள்ளது.
டிசம்பர் 28 ஆம் திகதி 1923 ஆம் ஆண்டு பரிசில் உயிரிழந்த இவர், என்றுமே மக்கள் மனங்களில் உச்சரிக்கப்படுகின்றவர் தாம்!!