Paristamil Navigation Paristamil advert login

வீடற்றவர்களுக்காக ”plan hiver” திட்டம் - 3,400 இற்கும் மேற்பட்ட அகதிகள் வீதிகளில்..!!

வீடற்றவர்களுக்காக ”plan hiver” திட்டம் - 3,400 இற்கும் மேற்பட்ட அகதிகள் வீதிகளில்..!!

3 மார்கழி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 1483


வீதிகளில், பூங்காக்களில், மெற்றோக்களில் படுத்துறங்கும் வீடற்றவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் ‘குளிர்கால திட்டம்” (plan hiver) செயற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பரிசில் முறையான தங்குமிடமின்றி 3,492 பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான தங்குமிடங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றில் அவர்களுக்கான இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அகதிகளுடன் அவர்களது செல்லப்பிராணிகளையும் அழைத்துவரமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான உணவு தயாரித்து வழங்கும் செயற்பாடுகளையும், போர்வை, தலையணை, பாதுகாப்பான மெத்தைகள் என சில அத்தியாவசியமான பொருட்களயும் தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்