Paristamil Navigation Paristamil advert login

தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமர்..!!

தொலைக்காட்சி விவாதத்தில் பிரதமர்..!!

3 மார்கழி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 1310


ஐந்தாம் குடியரின் அரசியல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான நாளாக நாளை புதன்கிழமை அமைய உள்ளது. Michel Barnier இன் அரசாங்கம் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்துள்ளன. நாளை டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை அதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளன. 

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை அவர் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளார். TF1 மற்றும் France 2 ஆகிய தொலைக்காட்சிகளில் இரவு 8 மணிக்கு (20h) அவரது விவாதம் நேரலையாக ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக Gilles Bouleau மற்றும் d’Anne-Sophie ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

Nouveau Front populaire மற்றும் Rassemblement national ஆகிய கட்சியினர் இணைந்து நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்துள்ளனர் .

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்