Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்; முதல்வரிடம் பிரதமர் உறுதி

3 மார்கழி 2024 செவ்வாய் 07:52 | பார்வைகள் : 797


பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன. தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் வழங்கக்கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், இன்று (டிச.,03) பெஞ்சல் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். அப்போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் பதிவு

சமூகவலைதளத்தில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயல் தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழக மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்