Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு

இலங்கையில் அரிசியின் மொத்த விலை அதிகரிப்பு

3 மார்கழி 2024 செவ்வாய் 08:06 | பார்வைகள் : 322


இலங்கையில் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளனர்.

நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் மொத்த விலையை அதிகரித்துள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும், சம்பா அரிசி 260 ரூபாயாகவும், கீரி சம்பா 275 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த விலைக்கு தேவையான அரிசியின் அளவுக்கான கட்டணத்தை வங்கியில் செலுத்துமாறு அரிசி ஆலை உரிமையாளர்கள் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

சந்தையில் நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ரூ.220, சம்பா ரூ.230, கீரி சம்பா ரூ.260, அந்த விலைக்கு விற்பனை செய்ய நுகர்வோர் சேவை அதிகாரசபை சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள்? அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடு அரிசியை ரூ.235-240, சம்பா ரூ.250, கீரி சம்பா ரூ.260-265 என மொத்த விலையில் வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்