Paristamil Navigation Paristamil advert login

ஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts!!

ஒவ்வொரு மூன்று கி.மீ தூரத்துக்கும் ஒரு Roundabouts!!

27 மார்கழி 2018 வியாழன் 10:30 | பார்வைகள் : 18258


தினமும் இந்த வீதிகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றீர்களே... என்றாவது நீங்கள் குறிப்பிட்ட தூரத்துக்குள் எத்தனை Roundabouts ஐ கடந்து சென்றுள்ளீர்கள் என்று எண்ணியதுண்டா?? 
 
அப்படி நீங்கள் எண்ண ஆரம்பித்தால்.. உங்களுக்கு வாய் வலிப்பது தான் மிஞ்சும். 
 
சரி, உங்களுக்கு ஒரு ஆச்சரியமான தகவல் சொல்கின்றோம்... பிரான்சில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டருக்கும் ஒன்று எனும் கணக்கில் Roundabout கள் உள்ளன. பிரான்சில் உள்ள ஒரு மில்லியன் கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட சாலைகளுக்கு கணக்கு பாருங்களேன்...?? 
பிரான்சில் மொத்தமாக 32,000 Roundabouts உள்ளன. 
 
உலகில் அதிகம் Roundaboutகள் கொண்ட நாடாக பிரான்ஸ் உள்ளது!
 
இதற்கு அடுத்த இடத்தில் 25,000 Roundabout களுடன் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 
 
பிரான்சில் உள்ள Roundabout கள் ஒரு நேர்த்தியான ஒழுங்கை கொண்டுள்ளது எனவும், அதிகபட்சமான Roundabout கள் ஒரே போன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
L'Arc de Triomphe தவிர்த்து, அதிகபட்சமாக எட்டு வீதிகளை இணைக்கும் Roundaboutகள் பிரான்சில் உள்ளன. 
 
சாரதி அனுமதி பத்திர சோதனைகளின் போது, <<carrefour à sens giratoire>> எனும் வார்த்தை குறித்து அறிந்திருப்பீர்கள்!! 
 
போலாம் ரைட்...!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்