வாடகை மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்.. 500 கி.மீ போக்குவரத்து நெரிசல்!!
3 மார்கழி 2024 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 1433
வாடகை மகிழுந்து சாரதிகள் இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலைகளில் மகிழுந்துகளை மிக மெதுவாகச் செலுத்தி செயற்கை போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியுள்ளனர்.
இன்று காலை 8 மணி அளவில் 490 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் பதிவானது. பரிசை நோக்கி வரும் A1 நெடுஞ்சாலையில் Gonesse மற்றும் Porte de la Chapelle நகரங்களுக்கிடையே பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாடகை கட்டணங்கள் குறைக்கப்படுவதையும், நோயாளிகளை ஏற்றிச் செல்லும் போது குறைந்த கட்டணம் வாங்கப்பட வேண்டும் எனும் நிபந்தனையும் எதிர்த்து அவர்கள் நேற்று திங்கட்கிழமை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.