Paristamil Navigation Paristamil advert login

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை சினிமா ஆகிறது...!

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை சினிமா ஆகிறது...!

3 மார்கழி 2024 செவ்வாய் 14:49 | பார்வைகள் : 4264


1980களில் தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்தவர் சில்க் ஸ்மிதா. தன் அழகாலும், ஆட்டத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். புகழின் உச்சியில் இருந்தபோதே தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்தது. ஹிந்தியில் 'தி டர்ட்டி பிக்சர்' என்ற பெயரில் சினிமா ஆனது. வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்தார். இதற்காக அவர் தேசிய விருதும் பெற்றார்.

தமிழில் 'ஒரு நடிகையின் டைரி' உள்ளிட்ட பல படங்கள் தயாரானது. தற்போது மீண்டும் அவரது வாழ்க்கை திரைப்படமாகிறது. "சில்க் ஸ்மிதா: குயின் ஆப் தி சவுத்" என்ற பெயரில் எஸ்டிஆர்ஐ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதனை இந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் சந்திரிகா ரவி, சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார். ஜெயராம் சங்கரன் இயக்குகிறார். விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்