அகதிகளின் சட்டவிரோத பயணங்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை!!

3 மார்கழி 2024 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 7345
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கும் அகதிகளை கட்டுப்படுத்த மேலும் சில சிறப்பு நடவடிக்களை உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அகதிகள் பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக சிறு படகுகளிலும், சிலர் வாகனங்களில் மறைந்து ஒளிந்தும் பயணிக்கின்றனர். இந்த ஆபத்தான் பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.
அகதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து உள்துறை அமைச்சர் Bruno Retailleau, சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.
தரை மற்றும் வான் வழி கண்காணிப்புகளுக்காக ட்ரோன் கருவிகளுடன் 60 சிறப்பு நிபுணர்களும், Dunkerque மாவட்டத்துக்கு 15 காவல்துறையினரும், Calais மாவட்டத்துக்கு 10 காவல்துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் பேருந்து மற்றும் மகிழுந்துகளூடாக ஆட்கடத்தலில் ஈடுபடுவர்களை கண்காணிப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3