சிரிய படைகளிற்கு உதவும் ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள்...
3 மார்கழி 2024 செவ்வாய் 17:16 | பார்வைகள் : 5737
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்திற்கு ஆதரவளிப்பதற்காக ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் சிரியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் அலப்போவை கைப்பற்றி மேலும் முன்னேறிக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே ஈரான் சார்பு ஆயுதக்குழுக்கள் சிரியாவிற்குள் சென்றுள்ளன.
ஈராக்கிலிருந்து சிரியாவிற்குள் நுழைந்துள்ள ஆயுதக்குழுக்கள் சிரியாவின் வடபகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
ஈரான் சார்பு ஈராக் அமைப்பான ஹசாட் அல் சபி அமைப்பினை சேர்ந்தவர்களும் சிரியாவிற்குள் நுழைந்துள்ளனர் என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள சிரிய இராணுவ வட்டாரங்கள் அல்புக்காமலில் உள்ள இராணுவத்தினர் பயன்படுத்தும் பாதையை பயன்படுத்தியே இவர்கள் சிரியாவிற்குள் சென்றுள்ளன என குறிப்பிட்டுள்ளன.
2011 இன் பின்னர் சிரியாவின் உள்நாட்டு போர் உக்கிரமடைந்த காலத்தில் சிரிய அரசாங்கத்தின் சார்பில் போரிடுவதற்காக ஈரான் ஷியாஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களை சிரியாவிற்குள் அனுப்பியிருந்தது.சிரிய அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக ரஸ்யா தனது வான்பலத்தை பயன்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக அவ்வேளை சிரிய ஜனாதிபதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்கி பல பகுதிகளை மீள கைப்பற்றினார்.

























Bons Plans
Annuaire
Scan