Fontainebleau காட்டில் உள்ள கல் உருவங்கள்!!
25 மார்கழி 2018 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18958
Fontainebleau காடு, இல்-து-பிரான்சுக்குள் உள்ள மிகப்பெரிய காடு. 250 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக்கொண்ட இந்த காட்டுக்குள் ஒரு இயற்கை அதிசயம் உண்டு.
இந்த காட்டில் 44 வீதம் Oak மரங்கள் நிறைந்துள்ளன. அவை தவிர பல வகை மரங்கள், செடிகள், விலங்கினங்கள், ஊர்வன என நீளும் பட்டியலில் இறுதியாக சேர்வது கற்பாறைகள்.
கற்பாறைகள்... அது சாதாரண பாறைகள் அல்ல... ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு தோற்றத்தில் காணப்படுகின்றது. 'கோபத்தில் மூஞ்சையை நீட்டிக்கொண்டு இருக்கும் தவளை', வெட்கத்தில் தலையை குணிந்துகொண்டிருக்கும் யானை' , 'கடைக்கண்ணால் பார்க்கும் திமிங்கிலம்!' என இங்குள்ள பாறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லும்.
ஆச்சரியம் என்னவென்றால் இவை அனைத்தும் இயற்கையாக தோன்றியவை... எதையும் மனிதர்கள் உருவாக்கவில்லை.
மேகமூட்டங்கள் சில வேளைகளில் நமக்கு ஒரு உருவத்தை ஒத்து இருப்பதாக தோன்றும் இல்லையா... அதேபோன்று இங்குள்ள கற்பாறைகளும் ஆயிரம் கதை சொல்லும்...!!
அங்கிருந்து சில புகைப்படங்கள் உங்களுக்காக....!!