10 விக்கெட் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
4 மார்கழி 2024 புதன் 05:08 | பார்வைகள் : 125
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தோரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
இப்போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சுஃபியான் முகீம் (Sufiyan Muqeem) அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
25 வயதான அவர் மூன்று ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து தொடர்ச்சியாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால், ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு து.
இதையடுத்து, பாக்கிஸ்தான் அணியில் களமிறங்கிய சைம் அயூப் (36) மற்றும் ஒமைர் யூசுப் (22) இருவரும் 33 பந்துகளில் 61-0 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தனர்.