Paristamil Navigation Paristamil advert login

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை நம்ப முடியவில்லை.. ஜனாதிபதி மக்ரோன்!!

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை நம்ப முடியவில்லை.. ஜனாதிபதி மக்ரோன்!!

4 மார்கழி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 1351


அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருவதை என்னால் நம்ப முடியவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

தற்போது சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, "அரசாங்கத்துக்கு எதிராக Rassemblement national கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. என்னால் அதனை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதனுடன் Nouveau Front populaire இணைந்துள்ளதா? என்னால் அதனை நம்ப முடியவில்லை. அவர்களது அரசியல் சித்தார்ந்தத்துக்கு எதிரானது அது. மக்கள் மீதான வெறுப்பின் ஒரு அங்கமாகத்தான் அது நிச்சயம் இருக்கும்' என தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டார்.

இன்று புதன்கிழமை பிற்பகலிப் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்களிப்பு இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது 298 ஆதரவு வாக்குக்குகள் பெறப்பட்டால் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்