பாலஸ்தீனத்தை உருவாக்க சவுதி அரேபியாவுடன் பிரான்ஸ் கை கோர்க்கும்.. - ஜனாதிபதி மக்ரோன்!!
4 மார்கழி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 1267
பாலஸ்தீனத்தை உருவாக்க சவுதி அரேபியாவுடன் பிரான்ஸ் கைகோர்த்து செயற்படும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார். பாலஸ்தீனத்தை உருவாக்குவதன் அவசியத்தை தற்போது உலக நாடுகள் ஏற்றுக்கொண்டு வருகின்றன. இதுவரை ஸ்பெயின், அயர்லாந்து, நோர்வே, ஸ்லோவேனியா போன்ற நான்கு ஐரோப்பிய நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் பின்னடைவில் நின்ற பிரான்ஸ் தற்போது அந்த சிந்தனைகளை மாற்றி, ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
"2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம், நான் சவுதி அரேய மன்னர் Mohammed bin Salman உடன் இணைந்து மாநாட்டில் கலந்துகொள்வேன்!" என மக்ரோன் தெரிவித்தார்.
"இந்த திசையில் செல்ல தயாராக இருக்கும் - அதேவேளை பிரான்சுக்காக காத்திருக்கும் ஐரோப்பிய மற்றும் ஐரோப்பியர் அல்லாத பல கூட்டாளி மற்றும் நட்பு நாடுகளை நாங்கள் வழிநடத்த விரும்புகிறோம்" என மக்ரோன் மேலும் குறிப்பிட்டார்.