பதவி விலகுவாரா ஜனாதிபதி.. அனைத்து கதவுகளையும் அடைத்த மக்ரோன்!!
4 மார்கழி 2024 புதன் 10:36 | பார்வைகள் : 2264
”இறுதி நொடி வரை நானே ஜனாதிபதியாக இருப்பேன்!” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இன்று நவம்பர் 4 ஆம் திகதி அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்கட்சிகள் தயாராகியுள்ளனர். அரசாங்கம் கவிழ்க்கப்பட்டால், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பதவிவிலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், “அரசாங்கத்தை கவிழ்க்க நினைப்பதை என்னால் நம்ப முடியவில்லை!” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், “இறுதி நொடி வரை நான் ஜனாதிபதியாக இருப்பேன்!.. நான் அரசியலில் கற்பனைகளை செய்வதில்லை!” என தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் வைத்து CNEWS ஊடகத்துக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 7 மணியின் பின்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணைக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. புதிய பிரதமருக்கான தேவை இருக்கிறதா என்பது இரவு 8 மணிக்கு தெரியவரும்.