Paristamil Navigation Paristamil advert login

ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்

ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்

4 மார்கழி 2024 புதன் 14:50 | பார்வைகள் : 3425


ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த திருமணம் குறித்த அழைப்பிதழ் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளின் ஒருவரான கீர்த்தி சுரேஷ், ஆண்டனி என்பவரை தனது பள்ளி காலத்தில் இருந்து காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் தான் அவர் தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’15 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டோம், இனியும் தொடர்வோம்’ என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற உள்ளதாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில், தற்போது அவரது திருமணம் குறித்த பத்திரிகை அழைப்பிதழ் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி திருமணம் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்ற நிலையில் அதே நாளில் தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.மேலும் இந்த திருமணத்தில் தென்னிந்திய திரை உலகின் பல பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்